உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை. / The Lord your God, He is the One who goes with you. He will never leave you nor forsake you.

உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை. / The Lord your God, He is the One who goes with you. He will never leave you nor forsake you.

உபாகமம் 31:1-6

1. பின்னும் மோசே போய் இஸ்ரவேலர் யாவரையும் நோக்கி:

2. இன்று நான் நூற்றிருபது வயதுள்ளவன்; இனி நான் போக்கும் வரத்துமாயிருக்கக் கூடாது; இந்த யோர்தானை நீ கடந்துபோவதில்லை என்று கர்த்தர் என்னோடே சொல்லியிருக்கிறார்.

3. உன் தேவனாகிய கர்த்தர்தாமே உனக்கு முன்பாகக் கடந்துபோவார், அவரே உனக்கு முன்னின்று, அந்த தேசத்தாரை அழிப்பார்; நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிப்பாய்; கர்த்தர் சொன்னபடியே யோசுவா உனக்கு முன்பாகக் கடந்துபோவான்.

4. கர்த்தர் அழித்த எமோரியரின் ராஜாக்களாகிய சீகோனுக்கும், ஓகுக்கும், அவர்கள் தேசத்திற்கும் செய்ததுபோலவே அவர்களுக்கும் செய்வார்.

5. நான் உங்களுக்கு விதித்த கட்டளைகளின்படி அவர்களுக்குச் செய்வதற்கு கர்த்தர் அவர்களை உங்களுக்கு ஒப்புக்கொடுப்பார்.

6. நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருங்கள், அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று சொன்னான்.

Deuteronomy 31:1-6

1 Then Moses went and spoke these words to all Israel. 2 And he said to them: “I am one hundred and twenty years old today. I can no longer go out and come in. Also the Lord has said to me, ‘You shall not cross over this Jordan.’ 3 The Lord your God Himself crosses over before you; He will destroy these nations from before you, and you shall dispossess them. Joshua himself crosses over before you, just as the Lord has said. 4 And the Lord will do to them as He did to Sihon and Og, the kings of the Amorites and their land, when He destroyed them. 5 The Lord will give them over to you, that you may do to them according to every commandment which I have commanded you. 6 Be strong and of good courage, do not fear nor be afraid of them; for the Lord your God, He is the One who goes with you. He will not leave you nor forsake you.”

Leave your thoughts below...

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Don`t copy text!